தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

🦉மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

03:54 PM Oct 07, 2024 IST | admin
Advertisement

வருடா வருடம் ஒவ்வொரு துறையிலும் சிறந்து சேவையாற்றி வரும் விஞ்ஞானிகள் மற்றும் பொது சேவையில் மிகச்சிறந்த முறையில் பங்காற்றியதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மருத்துவத்திற்கு பெருமை சேர்த்த இரு விஞ்ஞானிகளான விக்டர் அம்புரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப் படுவதாக சுவீடனின் கரோலின்ஸ்கா பயிற்சி மையத்திலிருந்து இன்று அறிவிக்கப்பட்டது.

Advertisement

மைக்ரோ ஆர்என்ஏவை கண்டுபிடித்து அது தொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்டமைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.இவர்களுக்கு நோபல் பரிசுடன் 11 மில்லியன் ஸ்வீடிஷ் கிரௌன்ஸ் பரிசு தொகையாக வழங்கப்படும். ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள தேர்வு குழு இந்த விருது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisement

விக்டர் அம்புரோஸ்(70) கேரி ருவ்குன் இருவரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
AmericansAwardeddiscovery of microRNAGaryRuvkunmedicineNobelPrizeVictorAmbros
Advertisement
Next Article