தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வெளிநாடு செல்ல வரி அனுமதிச் சான்றிதழ் விவகாரம்!

06:29 PM Jul 29, 2024 IST | admin
Advertisement

வெளிநாடு செல்லும் அனைவரும் வரி அனுமதிச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து, நிதி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் வரி பாக்கி அதிக அளவில் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வரி அனுமதிச் சான்றிதழ் தேவை என மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

தற்போது கொண்டு வரப்பட்டுள்ளத் திருத்தத்தின்படி வெளிநாடு செல்லும் அனைவரும் வரி அனுமதிச் சான்றிதழ் பெறத் தேவையில்லை’ என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த திருத்தத்தில் கருப்புப் பணச் சட்டம் 2015-ன் குறிப்புகள் சேர்க்கப்பட்டு, வெளிநாடு செல்லும் நபர்கள் வரி நிலுவைகளைச் செலுத்தி அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement

வருமான வரித்துறையின் 2004 அறிக்கையின்படி, கடுமையான நிதி முறைகேடுகள் மற்றும் வருமான வரி, சொத்து வரிச் சட்டம் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர் நேரடியாக ஆஜராகவோ வரியைச் செலுத்தவோ தேவையிருக்கும் பட்சத்தில் அல்லது ஒரு நபரின் நேரடி வரி நிலுவை ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவை நிறுத்தி வைக்கப்படாமல் இருப்பது போன்ற வழக்குகளில் மட்டுமே வரி அனுமதிச் சான்றிதழ் வாங்க வேண்டும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :
abroadtax clearannce
Advertisement
Next Article