விண்வெளியில் பிறந்த நாளை கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்!
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22 ஆம் தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்களை ஏற்றி சென்ற, போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை விட்டுவிட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு வந்தடைந்தது. அவர்களை பூமிக்கு பத்திரமாக மீட்டு வர பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும் என தெரியந்துள்ளது. இதற்கிடையே, சுனிதான வில்லியம்ஸ் 2 வது முறையாக விண்வெளியில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதன்படி, சுனிதா வில்லியம்ஸ் நேற்று தனது 59 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.அவர் அடுத்த பிறந்தநாளை பூமியில் வைத்து கொண்டாடி மகிழ்வார் என சமூகவலைதளத்தில் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதற்கு முன்பு, கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரை அவர் விண்வெளியில் இருந்தபோது தன்னுடைய பிறந்தநாளை முதல்முறையாக அங்கு கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.