தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணி!:

06:34 PM Sep 22, 2024 IST | admin
Advertisement

மிழக தலைநகராம் சிங்காரச் சென்னையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது 4-வது நாளான இன்று நிறைவு பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த டெஸ்ட் வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய சரித்திரம் படைத்துள்ளது. அதன்படி, 1932 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இந்தியா, சென்னை டெஸ்ட் போட்க்கு முன்பு வரை 579 போட்டிகளில் விளையாடி இருந்தது. அதில், தலா 178 ஆட்டங்களில் வெற்றி மற்றும் 178 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. அதேநேரம், 222 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. இந்த சூழலில் சென்னை போட்டியில் வங்கதேச அணியை இந்தியா வீழ்த்தியதால், ரோகித் சர்மா தலைமையிலான அணி டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவிற்கான 179வது வெற்றியை பதிவு செய்தது. அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து முதல்முறையாக, இந்திய அணி தோல்விகளின் எண்ணிக்கையை காட்டிலும், அதிக வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு, சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

முன்னதாக இப் போட்டியில் முதல் நாளில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி இந்திய அணி பேட்டிங் களமிறங்கியது முதல் இன்னிங்ஸில் அஸ்வின் மற்றும் ஜடஜாவின் நீதான ஆட்டத்தால் இந்திய அணி வலிமையான ஒரு முன்னிலை பெற்றது.அதனால் முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் இந்திய அணி எடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சொதப்பியதால் வெறும் 149 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸ்க்கு களமிறங்கிய இந்திய அணி சுப்மன் கில் (119* ரன்கள்) மற்றும் ரிஷப் பண்ட் (109 ரன்கள்) இருவரின் அபார சதத்தால் 500 ரன்களைக் கடந்து முன்னிலை பெற்று இருந்தது.இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸ்க்கு 4 விக்கெட்டுகள் இழந்து 257 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதன் மூலம் வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Advertisement

நேற்றைய நாளில் வங்கதேச அணி தனது 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் தொடர்ந்தது. தொடக்கத்தில் வலுவான ஒரு கூட்டணியை அமைத்த வங்கதேச அணி அதன் பிறகு விக்கெட்டை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. இருந்தாலும், நேற்றைய தினம் இந்திய அணிக்கு வங்கதேச பேட்ஸ்மேன்கள் சவாலாகவே அமைந்தனர். அதன் பிறகு இன்று காலை 4-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்கத்தில் வங்கதேச பேட்டிங் சற்று வலுப்பெற்றால் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழலால் வங்கதேச அணி துரதிஸ்டவசமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.மேலும், நன்றாக ஒரு முனையில் விளையாடி வந்த ஷாண்டோ 82 ரன்களில் ஜடேஜாவின் பந்து வீச்சில் அவுட்டாகினார். அவரை தாண்டி எந்த ஒரு வீரரும் நிலைத்து விளையாடாமல் விக்கெட்டை இழந்தனர். இதன் காரணமாக வங்கதேச அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் மற்றும் ஜடேஜா, இருவரும் இணைந்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். அதில் அதில் அஸ்வின் 6 விக்கெட்டுகளும்,டேஜா 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியிருந்தார்கள். முதல் இன்னிங்ஸிலும் பேட்டிங் ஆர்டர் சொதப்பிய போது இவ்விருவரும் தான் சரிவிலிருந்து மீட்டனர். தற்போது, பவுலிங்கிலும் விக்கெட்டுகள் தேவைப்பட்ட நிலையில் இவ்விருவரும் தான் காப்பாற்றி உள்ளனர். இதன் மூலம் இருவரும் தலை சிறந்த டெஸ்ட் போட்டி ஆல் ரவுண்டர் என நிரூபித்து உள்ளனர். வங்கதேச அணியை 234 ரன்களுக்கு சுருட்டியதால் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.மேலும், இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த அடுத்த டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் நடைபெறுகிறது.

Tags :
ban vs indBangladesh Tour Of India 2024chennaiIndia vs bangladeshINDvsBAN
Advertisement
Next Article