தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

லயோலா காலேஜூல் டைப்பிஸ்ட், ஆபீஸ் அசிஸ்டெண்ட், ரிக்கார்டு கிளார்க் உள்ளிட்ட பணியிட பணி வாய்ப்பு!

05:33 AM Jan 27, 2025 IST | admin
Advertisement

சென்னை மாநகரின் அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது லயோலா கல்லூரி என்றால் அது மிகையல்ல. ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கியதோடு, ஏராளமான ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களையும் உருவாக்கி பீடு நடை போட்டு வருகிறது. இந்தக் கல்லூரி சென்னை நுங்கம்பாக்கத்தில் 99 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்து உள்ளது . இந்த வளாகத்தில் மரங்கள் நிறைந்த பாதைகள், கல்விக் கட்டிடங்கள், 1930-ம் ஆண்டுக்கு முந்தைய செங்குத்தான கோதிக் தேவாலயம் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனி மைதானங்கள் அழகுற அமைந்து உள்ளன. லயோலா கல்லூரி தேசிய தரமதிப்பீடு அங்கீகார கவுன்சிலின் (NAAC) ஏ பிளஸ் (A ) அங்கீகாரத்துடன் அமைந்துள்ளது கல்லூரியாகும்.தன்னாட்சி பெற்ற இப்பேர்பட்ட லயோலா கல்லூரியில் ஆய்வக உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.02.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisement

பணியிடங்கள் விவரம்:

Advertisement

தட்டச்சர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

ஆய்வக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரிக்கார்ட் கிளார்க்

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

துப்புரவாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வாட்ச்மேன்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வாட்டர்மேன்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தோட்டக்காரர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தோட்டி

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மார்க்கர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பண்டக காப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், பி.சி, எம்.பி.சி, பி.சி.எம் பிரிவினர் 32 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

Secretary & Correspondent,
Loyola College,
Chennai - 600034

விண்ணப்பதாரர்கள் பயோ டேட்டாவை secretary@loyolacollege.edu என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

02.02.2025

மேலும் விவரங்கள் அறிய https://www.loyolacollege.edu/ இணையதளத்தைக் கிளிக் செய்யவும்

Tags :
chennaicareersjobopportunityjobsearchjobvacancyLoyola CollegeOffice AssttamilnadujobstypistWatchmanசென்னை லயோலாலயோலா கல்லூரி
Advertisement
Next Article