For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் அவுட்!.டவுன்லோடு செய்வது எப்படி?

05:09 PM May 02, 2024 IST | admin
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் அவுட்  டவுன்லோடு செய்வது எப்படி
Advertisement

நாடெங்கும் மருத்துவப் படிப்புக்களை படிக்க நீட் நுழைவுத் தேர்வு மிக மிக அவசியம். அந்த வகையில் நடப்பாண்டுக்கான நுழைவு தேர்வு இந்தியா முழுவதும் 571 நகரங்களில் நடைபெற உள்ளது. தமிழ் உட்பட 13 மொழிகளில் நீட்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2024-25 கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி 10ம் தேதி தொடங்கியது. அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.nta.ac.in, exams.nta.ac.in/NEET மூலம் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

Advertisement

இதன்படி, மருத்துவ படிப்புகளில் சேர ஆர்வம் உள்ள 23,81,33 மாணவ மாணவியர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளமான exams.nta.ac.in மற்றும் neet.ntaonline.in ஆகிய  இணையத்தில் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று முதல் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நீட் நுழைவுத் தேர்வு மே 5 ஆம் தேதி இந்தியாவில் உள்ள 571 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5:20 மணிக்கு முடிவடையும், 3 மணி நேரம் 20 நிமிடங்கள் வரை தேர்வு எழுத நேரம் ஒதுக்கப்படும். ஆங்கிலம், இந்தி, அசாமிஸ், பெங்காலி, ஒடியா, கன்னடா, பஞ்சாபி, உருது, மலையாளம், மராத்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. நீட் தேர்வு எழுத 23,81,833- பேர் இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளார்கள்.

நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டில் மாணவரின் பெயர், ரோல் எண், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு நகரம் மற்றும் மையம், அத்துடன் அந்தந்த குறியீடுகளுடன் பாடங்கள் இருக்கும். ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின் போன்ற உள்ளீடு செய்து விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement