நிலத்தடி நீர் உறிஞ்சலால் பூமி அச்சு சாய்வு:ஆய்வு முடிவு!
ஜியோ பிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை:
மனிதன் தனது தேவைக்காக நிலத்தடியிலிருந்து எடுக்கும் நீரினால் பூமியானது 32.5 அங்குலம் சாய்ந்துள்ளது..பூமியிலிருந்து எடுக்கப்படும் நிலத்தடி நீரினால் பூமியின் அச்சு 31.5 அங்குலம் சாய்ந்துள்ளது. இந்த ஆய்வின்படி மனிதர்கள் தங்களது தேவைக்காக சுமார் 2150 ஜிகாடன் நிலத்தடி நீரை வெளியேற்றியதாக தெரிய வருகிறது.
சியோல் நேஷனல் யுனிவர்சிட்டியின் கி-வியோன் சியோ தலைமையிலான ஆராய்ச்சியில், 1993 மற்றும் 2010 க்கு இடைப்பட்ட காலத்தில் பூமியிலிருந்து உறிஞ்சப்பட்ட நிலத்தடி நீர் குறைவினால், பூமியின் துருவமானது கிழக்கு நோக்கி ஏறத்தாழ 80 சென்டிமீட்டர்கள் நகர்ந்துள்ளது.
பனிக்கட்டி உருகுதல் போன்ற இயற்கையான காரணங்களைக் காட்டிலும், நிலத்தடி நீர் குறைவால்தான் பூமியின் அச்சில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது
பூமியின் சாய்வின் ஏற்பட்ட இத்தகைய மாற்றம் வானிலை, மற்றும் பருவங்களை உடனடியாக பாதிக்காது என்றாலும், தொடர்ந்து நிலத்தடி நீரானது உறிஞ்சப்பட்டால் நீண்ட கால காலநிலை தாக்கங்களை அது ஏற்படுத்தும் .
மேலும், நிலத்தடி நீரை நீர்நிலைகளிலிருந்து பெருங்கடல்களுக்கு மறுபகிர்வு செய்வது இந்த இயக்கத்தை பாதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக இருக்கும்
சியோல் நேஷனல் யுனிவர்சிட்டியின் இந்த ஆய்வானது உலகளாவிய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கும் இயற்கை வளங்களை நிலையான முறையில் நிர்வகிப்பதற்கும் , நிலத்தடி நீர் குறைவதை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.