நியூ இந்தியா அஷ்யூரன்ஸில் உதவியாளர் பணி வாய்ப்பு!
பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும், இந்தியாவெங்கும் 1068 கிளை அலுவலகங்களைக் கொண்டதும், சர்வதேச அளவில் வணிக ரீதியான செயல்பாடுகளைக் கொண்டதுமான மத்திய அரசின் கீழ் செயல்படும் பெருமைமிகு நிறுவனமனா நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் (என்.ஐ.ஏ.சி.எல்.) நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விபரம்
உதவியாளர் பிரிவில் 500 காலியிடங்கள் உள்ளன.இதில் தமிழ்நாட்டில் 40 மற்றும் புதுச்சேரியில் 2 இடங்கள் உள்ளன. இதில் எஸ்சி 9, ஒபிசி 7, பொருளாதாரத்தில் பின்தங்கியவர் 4 மற்றும் பொதுப் பிரிவில் 22 இடங்கள் என்ற விதம் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 10 மற்றும் 12ஆம் வகுப்பில் ஆங்கிலம் பாடம் கொண்டு படித்திருக்க வேண்டும். மேலும் இப்பணியிடங்களுக்கு தமிழ் மொழி அவசியம். தமிழில் எழுதப் படிக்க பேச தெரிந்திருக்க வேண்டும்.
வயது:
01.12.2024 தேதியின்படி, விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 21 வயதைக் கடந்திருக்க வேண்டும். மேலும், அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். எஸ்சி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பள விவரம்
இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.22,405 முதல் ரூ.62,265 வரை வழங்கப்படும். தொடக்கமே மாதம் ரூ.40,000 கையில் கிடைக்கும். மேலும், ஊழியர்களுக்கான கூடுதல் சலுகைகள் உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை
உதவியாளர் பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தமிழ் மொழிக்கான தகுதித் தேர்வு நடைபெறும். முதல்நிலை தேர்வு 100 மதிப்பெண்களுக்கும், முதன்மை தேர்வு 250 மதிப்பெண்களும் நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, நாகர்கோயில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் https://www.newindia.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை தகுந்த விவரங்களுடன் நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்தினால் போதும்.
கடைசிநாள்:
1.1.2025
விவரங்களுக்கு: