For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

நானும் டாக்டர் ; 3 அடி உயரம் கொண்டாலும் சாதித்த மருத்துவர் கணேஷ் பாரய்யா!!

06:22 PM Mar 07, 2024 IST | admin
நானும் டாக்டர்   3 அடி உயரம் கொண்டாலும் சாதித்த மருத்துவர் கணேஷ் பாரய்யா
Advertisement

சராசரி மனிதர்களில் இருந்து வேறு பட்டு இருப்பவர்களைச் சிறப்பானவர்களாகத்தான் பார்க்க வேண்டும். ஆனால், நம் சமூகம் அவர்களைக் குறைபாடு உள்ளவர்களாகப் பாவிக் கிறது. ஒரு கணத்தில் அவர்களை நகைச்சுவையாகப் பார்க்கிறது; கேலிக்கு உள்ளாக்குகிறது. இதனால், சற்றுப் பலவீனமாக இருக்கும் சிலர் மேலும் தங்களுக்குள் ஒடுங்கிவிடும் ஆபத்து உண்டு. இதெல்லாம் எதிர்கொண்ட 3 அடி உயரமுள்ள டாக்டர் கணேஷ் பாரய்யா என்பவர் பல்வேறு தடைகளைத் தாண்டி குஜராத்தில் பாவ்நகர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்துள்ள நிகழ்ச்சி என்பது ஒரு கொண்டாட்டமாக அனுசரிக்கப்பட வேண்டியது அவசியம் ஆயினும் இவரது சாதனைக்கு பலதரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம்தான் உள்ளன.

Advertisement

குஜராத் மாநிலம் தாலஜா எனும் பழங்குடி கிராமத்தை சேர்ந்த சேர்ந்தவர் கணேஷ் பாரய்யா (23). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கணேஷ் பாராய்யாவுக்கு  வயது 23. ஆனால் 3 அடி உயரம் கொண்டவர். பிறக்கும் போதே குள்ளத்தன்மையுடன் பிறந்த இவரின் உடலில் 72% லோகோமோட்டிவ் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.இவர் குள்ளமாக இருப்பதால் பள்ளி படிப்பில் சகமாணவர்கள் போல் இவரால் சகஜமாக இருக்க முடியவில்லை. பலர் கேலி கிண்டல்கள் செய்துள்ளனர். இருந்தும் அனைத்தையும் தாங்கிக் கொண்டு சிறு வயதில் இருந்தே மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. அதற்காக பள்ளிப்படிப்பை முடித்த கணேஷ் பாராய்யா, மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக நீட் தேர்விற்கு தயாராகினார். அதன் பிறகு, நீட் தேர்வில் 233 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இதை அடுத்து மருத்துவம் படிப்பதற்காக, கடந்த 2018ம் ஆண்டு ஆசையோடு விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பத்தை இந்திய மருத்துவ கவுன்சில் நிராகரித்தது. அதற்கு காரணம் அவரது மதிப்பெண் அல்ல.. அவரது 3 அடி உயரம். "உயரம் குறைவான அவரால், அவசரக்கால சிகிச்சைகளை அளிக்க முடியாது" என்று இந்திய மருத்துவ கவுன்சில் காரணம் கூறியது.

Advertisement

அதன் பிறகு அவர், தான் படித்த பள்ளியின் முதல்வரின் உதவியோடு, மாவட்ட ஆட்சியர், மாநிலக் கல்வி அமைச்சரை அணுகியுள்ளார். அவர் உயரம் குறைவால் சிறுவயது முதல் பல்வேறு கேலி கிண்டல்களை கடந்து வந்த கணேஷ்க்கு, விருப்பப்பட்ட மருத்துவ படிப்பை படிக்கவும் இதுவே தடையாக வந்துவிட்டதே என்று மனம் வருந்தினாலும் பிரயோஜமில்லாத நிலை இதைத் தொடர்ந்து .மருத்துவ படிப்பிற்கு அனுமதிக்கோரி குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார் அங்கு சாதகமான தீர்ப்பு வராததையடுத்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. ஓராண்டுக்கு பிறகு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மருத்துவ படிப்புக்கு உயரம் என்பது பொருட்டல்ல. எம்பிபிஎஸ் படிப்பதற்கு அனுமதி வழங்கி கணேஷ்க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

இதையடுத்து குஜராத் மாநிலம், பாவ் நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் இவருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்தது. சட்டப் போராட்டத்திற்கு பிறகு கிடைத்த எம்பிபிஎஸ் படிப்பில், முழுக்கவனத்தையும் செலுத்தினார் கணேஷ். அவருக்கு கல்லூரி பேராசிரியர்கள், உடன் படிக்கும் மாணவர்களும் உறுதுணையாக இருந்தனர். சமீபத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற அவர், தான் படித்த பாவ்நகர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்தியாவில் உயரம் குறைந்த முதல் மருத்துவர் என்ற பெயரையும் எடுத்துள்ளார்.

இது குறித்து கணேஷ் பாராய்யா செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது வர், “எனது உயரம் 3 அடி என்றும், அவசரகால வழக்குகளை என்னால் கையாள முடியாது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் குழு என்னை நிராகரித்துவிட்டது. பாவ்நகர் கலெக்டரின் வழிகாட்டுதலின் பேரில், நான் குஜராத் ஐகோர்ட்டுக்கு சென்றேன். 2 மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் வழக்கில் தோல்வி அடைந்தோம். அதன் பிறகு, சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று வழக்கு தொடுத்தோம். நான் மருத்துவ சீட்டு பெறலாம் என்று கடந்த 2019ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. அதன் பின்னர், எனக்கு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் கிடைத்தது. எனது மருத்துவ பயணமும் தொடங்கியது. நோயாளிகள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் முதலில் திடுக்கிட்டார்கள். சிறிது நேரத்தில், அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களின் ஆரம்ப நடத்தையையும் நானும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னுடன் அன்பாகவும் நேர்மறையாகவும் நடந்து கொள்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

ஆக சாதிக்க உயரம் தடையில்லை எனத் தொடர்ந்து செயல்படும் கணேஷ் பாராய்யாவின் நம்பிக்கையும் உழைப்பும் உலக அளவில் பலரையும் அவரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement