தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் கீழ் ரூ.1,000 உதவித்தொகை பெற வழிகாட்டு நெறிமுறைகள்!

06:00 PM Jul 25, 2024 IST | admin
Advertisement

மிழக அரசு, இந்த நிதியாண்டு முதல், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தை அறிமுகப்படுத்தி மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்க, வழிகாட்டி நெறிமுறைகள் அடிப்படையில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இந்த கல்வியாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.360 கோடிக்கு நிதி ஒப்புதல் அளித்து உத்தரவிடப்படுகிறது. இத்திட்டத்துக்கு அடுத்த நிதியாண்டில் தேவைப்படும் நிதி ஒதுக்கீட்டை, சமூக நலத்துறை மானியக் கோரிக்கையில் கோரும்படியும் சமூக நலத்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Advertisement

புதுமைப்பெண் திட்டம் போல உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.இந்த திட்டத்தின் பயன்களை எப்படி பெற வேண்டும்? என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறையின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரனின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-–

அரசுப் பள்ளி (ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம்), அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் மீடியம் மட்டும்) படித்துள்ள மாணவர்கள் தங்களின் இளங்கலை பட்டம், தொழிற்பயிற்சி, பட்டயக் கல்வி ஆகியவற்றை பெறும் காலம் வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.மத்திய ஆதார் சட்டப்படி சில அறிவுரைகளை பயனாளிகளுக்கு அரசு இதன் மூலம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் பயனை பெற தகுதியுள்ள மாணவன் தனக்கென்று ஆதார் எண் வைத்திருக்க வேண்டும். அல்லது ஆதார் எண்ணை பெறுவதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆதார் எண் இல்லாத மாணவர்கள், அந்த எண்ணை பெறுவதற்காக, அதற்கான மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் எண் இல்லாத நிலையிலும் இந்த உதவித்தொகையைப் பெற மேலும் சில அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அளிக்கலாம்.

அதன்படி, ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்துள்ள அடையாளச் சீட்டு; ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்துள்ளதற்கான மனுவின் நகல்; வங்கி அல்லது தபால் கணக்கு புத்தகம்; பான் அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை; மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட அட்டை; கிசான் கணக்கு புத்தகம்; ஓட்டுனர் உரிமம்; தாசில்தார் அல்லது ‘கெசடட்’ அதிகாரி அளித்துள்ள அடையாளச் சான்றிதழ், இவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்கலாம்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களும் இதில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேன்டும். இந்த தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி, அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் எண்ணை பெற அறிவுறுத்த வேண்டும். ஆதார் மையம் இல்லாத பகுதி என்றால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே ஆதார் நம்பரை பெறும் வசதிகளை ஏற்படுத்தி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய உதவ வேண்டும்.''இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
studentsTamilPudhalvanTamilPudhalvanSchemeதமிழ் புதல்வன்
Advertisement
Next Article