தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு பொதுப்பணித் துறை, தமிழக அரசின்கீழ் இயங்கும் துறையாகும். இது பொதுப்பணித் துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அரசுத் துறை கட்டுமானங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பெரும்பாலான கட்டிடங்கள் பராமரிப்பு, பாலங்கள், சாலைகள், மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானங்களை நிர்வகிக்கிறது. தற்போது அந்த தமிழ்நாடு பொதுப்பணித்துறையில், Diploma, Degree, B.E படித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 760 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி விபரங்கள்
1. பயிற்சியின் பெயர்: Graduate Apprentices (Engineering)
மொத்த காலியிடங்கள்:
500
(Civil Engineering – 460
Electrical and Electronics Engineering – 28
Architecture - 12)
உதவித்தொகை :
ரூ.9000
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Engineering or Technology படித்திருக்க வேண்டும்.
2. பயிற்சியின் பெயர்: Diploma Apprentices (Engineering)
மொத்த காலியிடங்கள்:
160
(Civil Engineering – 150
Electrical and Electronics Engineering – 5
Architecture – 5)
உதவித்தொகை :
ரூ.8000
கல்வி தகுதி:
Diploma in Engineering or Technology படித்திருக்க வேண்டும்.
3. பயிற்சியின் பெயர்: Graduate Apprentices (Non Engineering)
மொத்த காலியிடங்கள்:
100
கல்வித் தகுதி:
B.A. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM படித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை:
ரூ.9000
குறிப்பு:
2020 ஆம் கல்வியாண்டிற்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், தற்போது பயிற்சி பெற்றுக்கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
மேற்கண்ட படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி யானவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுபவர்களின் விபரம் 8.01.2025 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்.நேர்முகத்தேர்வு 21.01.2025 முதல் 24.01.2025 வரை நடைபெறும். அப்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
நேர் முகத்தேர்வு நடைபெறும் இடம்:
PWD Office, Chennai
விண்ணப்பிக்கும் முறை
www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் கல்வித்தகுதி உள்பட மற்ற விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டும்.பின்னர் மேற்கண்ட இணைய தளத்தால் வழங்கப்படும் Unique Enrolment Number-ஐ பயன்படுத்தி அதே இணையதளம் மூலமாக Public Works Department, Tamil Nadu என்ற லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
31.12.2024
பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.boat-srp.com என்ற இணையதள முகவரியின் NEWS & EVENTS பகுதியை பாருங்கள்.
மேலும் முழு விவரங்களுக்கு இந்த இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுதும் படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.