ட்விட்டருக்கு மாற்றாக உருவான கூ ஆப் குளோஸ்!
கடந்த 2020ம் ஆண்டு 60 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் தொடங்கப்பட்ட கூ செயலி எதிர்பார்த்த லாபத்தை எட்டாததை அடுத்து பல நிறுவனங்களுடனான இணைப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து தனது சேவைகளை நிறுத்த போவதாக அறிவித்துள்ளது.
முன்னதாக ட்விட்டருக்கு மாற்றாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள 'கூ' 'koo' ஆப் பிரபலமாகி வந்தது. அதிலும் கடந்த மார்ச் 2020 ஆம் ஆண்டில் பதிவிறக்கம் செய்யப்பட்ட 15- 16 மாதங்களில் ஒரு கோடி பதிவிறக்கங்களை கடந்தது. தொடக்கத்தில் இருந்து பெரிய வளர்ச்சியை பதிவு செய்து வந்ததாக சொல்லப்பட்டது. அதிலும் பல மொழி மைக்ரோ தளம் என குறிப்பிடக் காரணம் இதில் தமிழ், இந்தி, கன்னடம், மராத்தி, தெலுங்கு, அஸ்ஸாமி,பங்களா மற்றும் ஆங்கிலம் உட்பட எட்டு மொழிகளின் அணுகலை வழங்குகியது.மேட் இன் இந்தியா தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஊக்குவிக்கத் தொடங்கியதிலிருந்து, ஏராளமான இந்திய பயன்பாடுகள் வெளி வந்துள்ளன.
அதன்படி வெளியான முக்கிய செயலியே கூ ஆகும். Koo செயலி அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மாயங்க் பிடாவட்கா ஆகியோரால் உருவாக்கப்பட்டது.மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ரவி சங்கர் பிரசாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கிரிக்கெட்டர் அனில் கும்ப்ளே உள்ளிட்ட பல பிரபலங்கள் 'கூ' சமூகவலைதளத்தில் இணைந்தர். இதேபோல் அரசாங்கத் துறைகளும் ட்விட்டருக்கு மாற்றாக 'கூ' சமூகவலைதளத்தை பயன்படுத்தத் தொடங்கின.
ஆனால், தற்போது பல முக்கிய காரணத்தால் இந்நிறுவனத்தின் தளமே மூடப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.சமீப காலமாக கூ ஆப் நிதிநெருக்கடியில் மாட்டிக்கொண்டு தவித்து வந்த நிலையில், பல முதலீட்டு திரட்டும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை விற்க முயற்சி செய்தது, இதற்காக பல நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட பல்வேறு சுற்று பேச்சுக்களுக்குப் பிறகும் இணைப்பு மற்றும் விற்பனை முயற்சிகளிலும் தோல்வியடைந்தது. இதன் காரணமாக தற்போது KOO தளத்தின் ஆப்ரேஷன்ஸ் மொத்தமாக மூடப்பட்டு உள்ளதாக நிறுவனர் அபிரமேய ராமகிருஷ்ணன் லின்ங்டுஇன் தளத்தில் அறிவித்துள்ளார்.
ூ, செயலி, ஆப், நஷட்ம்,
இது குறித்து கூ செயலியின் நிறுவனர்கள் அபர்மேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் பிடாவட்கா தங்கள் சோசியல் மீடியா பக்கத்தில்,“மிகப்பெரும் இணையதள, தொழில்நுட்ப மற்றும் ஊடக தளங்களுடன் இணைப்புக்கான பேச்சுவார்த்தை மேற்கொண்டோம். இதன் விளைவு நாங்கள் எதிர்பார்த்தது போல இல்லை. மக்கள் உருவாக்கும் உள்ளடக்கங்கள் மற்றும் சமூக வலைத்தளத்தின் இயல்பான கூறுகள் அவர்களுக்கு உவப்பானதாக இல்லை.சிலர் முன்னுரிமையை மாற்றி ஒப்பந்தத்தின் இறுதி வரை வந்தபோதும் ஒப்பந்தம் எட்டப்படவில்லை” என தெரிவித்துள்ளனர். மேலும் 21 லட்சம் தினசரி உபயோகிப்பாளர்கள் தங்களுக்கு இருந்ததாகவும், மாதந்தோறும் 1 கோடிக்கு அதிகமானோர் கூ செயலியை பயன்படுத்தியதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.