தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

டிஜிட்டல் இந்தியாவின் எதிர்காலம் கும்மிருட்டு!

01:42 PM Jul 20, 2024 IST | admin
Advertisement

நான் சமீப காலமாக டிஜியாத்ரா app உபயோகிக்கிறேன். அதில் போர்டிங் பாஸ் ஏற்றிவிட்டால் ஏர்போர்ட்டில் முகம் காட்டினால் போதும். நம்மை உள்ளே விடும். காத்திருக்கும் நேரம் குறைவு. அதற்கு வெப் செக் இன் அவசியம் .நேற்று காலையில் இருந்து முயற்சித்தேன் .முடியவில்லை..டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் சனி அன்று இரவு பதினொரு மணிக்கு..!சரி செக் இன் ஆகவில்லை என ஏழு மணிக்கே ஏர்போர்ட் போகலாம் என முடிவெடுத்தேன்.மீட்டிங் என்பதால் உலக செய்திகள் காதுக்கு எட்டவில்லை..டாக்சி பிடித்து ஏர்போர்ட் செல்லும் பொழுது ஒரு செய்தி " உங்கள் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது" .உடனே மகனுக்கு போன் செய்தேன்..ஒன்றுமே செய்ய முடியாது என்றான்.

Advertisement

டாக்சியை திருப்ப முடிவு செய்து அடுத்த விமானங்கள் பார்த்தால் எல்லா இடத்திலும் சிக்கல். ஏர்போர்ட் போனால் வாசலில் என்.டி.டி வி ரிப்போர்ட்டரிடம் ஒரு பயணி கத்திக்கொண்டு இருந்தார்..இயற்கை எல்லா சிக்கலிலும் என்னை நிறுத்திவிடுகிறது.உள்ளே சென்றால் நூற்றுக்கணக்கில் இண்டிகோ அலுவலகம் சுற்றி .பாவம் அந்த அலுவலர்களால் சமாளிப்பது கடினமாய் இருந்தது . வெளிநாட்டு விமானங்ளை தவறவிட்டு பரிதாபமாய் நின்றனர். கைக்குழந்தகளோடு வேறு . தங்க இடம் சிலருக்கு தந்தார்கள்..நீர் கூட தரவில்லை. ஊழியர்களுக்கு சமாளிக்க முடியவில்லை..ஒரு பக்கம் போர்டிங் பாஸ் கையால் எழுதிக்கொண்டு இருந்தனர். ஒரு பக்கம் கூட்டம் சமாளித்தனர்.இரவு ஆக கூட்டம் கூடியதே தவிர குறையவில்லை..!

Advertisement

ஏர் இந்தியா சாஃப்ட்வேர் வேலை செய்தது. கார்ட் போகல..ஏ.டி.எம் போய் கேஷ் எடுக்க சொன்னார்கள் . டிக்கட் விலை 32,500. .இதான் சாக்கு என கொள்ளை அடிக்க தவறவில்லை.நேரம் ஆக ஆக அதுவும் கிடைக்கவில்லை. ஆன்லைனில் ஆகாசா Rs.12,600 க்கு இருந்தது. அதை யாத்ரா மூலம் புக் செய்தேன்..அதுதான் மிகப்பெரிய முட்டாள்தனம். ஏர் இந்தியாவே ஆன்லைன் பண பரிவர்த்தனம் செய்யவில்லை. டிக்கெட்டும் வரவில்லை .கஸ்டமர் கேரும் வேலை செய்யவில்லை. கடும் போராட்டம். அல்ரெடி கேன்சல் ஃப்ளைட், கூட்டம், நீர் கூட இல்லை, டிரைன் டிக்கட் எல்லாம் வெயிட்டிங் லிஸ்ட்..மூச்சு முட்ட 12,500 பணம் இழந்தது இன்னும்
கொடுமை.

பின் ஜி பே போன் செய்தால் பேங்க் என்றார்கள். டிஜி அப் என நம்பர் தந்தால் அது ரிகார்டட் மெசெஜ். அரை மணி நேரம் கழித்து யா த் ரா வே ரிஃபண்ட் மெயில் அனுப்பிவிட்டார்கள். பக்கத்தில் இருப்பவர்கள் வேறு அட்வைஸ்..ஏம்மா ஏதும் வேலை செய்யலன்னுதான் நடு ஏர்ப்போர்ட்டில் உக்காந்திருக்கோம்..இதில் போய் பணம் இழக்கலாமா என..!இப்படி எந்த சந்தில் போனாலும், முட்டு சந்துதான்..காலை ஃபைளைட்டுகள் வழக்கமாய் ஓடும் என சொல்ல இன்னும் ஆதங்கம் அதிகமானது. இதில் ஒரு போலிஸ் போன் சார்ஜ் போட அமர்ந்திருந்த பொழுது ஓரமாய் உக்காருங்க என்றார். வந்த கோவத்தை அவரிடம் காட்டினேன். ஒரு சேர் இல்ல, தண்ணி இல்ல, வசதி இல்ல..இதில் அதிகாரம் என்ன என கேட்டேன்..இண்டிகோவிடம் டிக்கட் வாங்கும் வரை சண்டை போடுவது வேஸ்ட்..அவர்களுக்கு நேரம் வேஸ்ட்..இரு பெங்களுர் மருத்துவர்கள் இப்போவே டிக்கட் கொடு என அடம் பிடித்தார்கள் . 12 க்கு வர சொன்னார்கள், 12.30 க்கு சொன்னார்கள்..இரவு 1 மணிக்கு விண்டோஸ் வேலை செய்ய ஆரம்பித்தது.

ஞாயிறு காலை டிக்கட் உள்ளதாய் சொல்ல, உடனே வாங்கினேன். என்னிடம் ஒரு கம்ப்யூட்டர் ஸ்கிரின்ல் எடுத்த போட்டோதான் இருக்கு. அதுதான் டிக்கட்.பார்ப்போம்.டிஜிட்டல் இந்தியாவின் எதிர்காலம் இருட்டாய் இருந்தது .மூன்று மணிக்கு திரும்பும் பொழுது.உலகம் மேனுவலாகவும் இயங்க தயாராகாவிடில் இன்னும் மோசமான விபத்துகளை சந்திக்க நேரிடும்.

இது ஒரு பாடம்.கற்றுக்கொள்ளாவிடில் பேராபத்தை எதிர்கொள்ள முடியாது.

டெல்லியில் ஜவஹர் பவனில் இருந்து கிர்த்திகா. 🙂

Tags :
air ticketdigitalMicrosoft
Advertisement
Next Article