தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

செபி தலைவரே அதானியின் கூட்டு களவாணி- ஹிண்டன்பர்க் அம்பலம்!

02:08 PM Aug 11, 2024 IST | admin
Advertisement

பிரதமர் மோடியின் பிரியத்துக்குரியவரான அதானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் இருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட செய்தியை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Advertisement

யு எஸ்-சை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதானி குழுமத்துக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர். அது தொடர்பான ஒரு வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்க விவகாரம் முற்றுப்பெற்றது. ஆனாலும், ஹிண்டன்பர்க் அறிக்கையை எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிரான தேர்தல் ஆயுதமாக பயன்படுத்தின.

Advertisement

இந்நிலையில், இந்தப் போலி நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் இருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்த கட்டுரையில், "அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய பங்குதாரர்களுக்கு எதிராக செபி தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை அல்லது விரும்பவில்லை. இப்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்க, செபி தலைவர் மாதபி பூரி புச் அதானியின் சகோதரர் உடன் உடந்தையாக இருப்பது காரணமாக இருக்கலாம். செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச், அவரின் கணவர் ஆகியோர் அதானி நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இந்த காரணத்தினாலேயே அதானி தொடர்புடைய பங்குதாரர்களுக்கு எதிராக செபி இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை." என்றும் கூறப்பட்டுள்ளது.அதானி - செபி தலைவர் மாதபி பூரி புச் ஆகியோரை தொடர்புபடுத்தி ஹிண்டன்பர்க் வெளியிட்டிருக்கும் தகவல் மீண்டும் இந்திய அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் செபி தலைவர் மாதபி பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கையை முற்றிலும் நிராகரித்த அதானி குழுமம், ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் முழுவதுமாக விசாரிக்கப்பட்டு, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று முடிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தனிப்பட்ட முறையில் ஆதாயம் பெறும் நோக்கில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதையொட்டி செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச், மற்றும் அவரது கணவர். இருவரும் ஒன்றாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். இதில் எந்த உண்மையும் இல்லை. எங்களின் வாழ்க்கையும், எங்களின் நிதியும் திறந்த புத்தகம். தேவையான அனைத்து ஆவணங்களும் செபிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் தனிப்பட்ட குடிமக்களாக இருந்த காலகட்டம் உட்பட இப்போதுவரை எங்களின் அனைத்து நிதி ஆவணங்களையும் எந்தவொரு இயக்கம் கோரினாலும் அதனை வெளியிட எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. வெளிப்படைத்தன்மையை கருத்தில் கொண்டு, உரிய நேரத்தில் விரிவான அறிக்கையை வெளியிடுவோம். ஹிண்டன்பர்க் மீது அமலாக்க நடவடிக்கை எடுத்து ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பிய செபி நடவடிக்கை எதிராக தற்போது எங்களின் நற்பெயரை கெடுக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது." என்று தெரிவித்துள்ளனர்.

Tags :
AdaniallegationsDhavalHindenburgissuseMadhabi BuchSEBI Chiefஅதானி குழுமம்செபிஹிண்டன்பர்க்
Advertisement
Next Article