For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சென்னை நகரெங்கும் முளைத்துள்ள Zero Is Good அறிவிப்பு பலகைகள் எதற்காக?

05:34 PM Aug 05, 2024 IST | admin
சென்னை நகரெங்கும் முளைத்துள்ள zero is good அறிவிப்பு பலகைகள் எதற்காக
Advertisement

மிழக தலைநகர் சென்னை சாலையெங்கும் தீடீரென் முளைத்துள்ள ‘Zero is Good’ எனும் பூஜ்ஜியம் நல்லது என்ற விளம்பர பதாகைகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளன. மஞ்சள் நிற பலரில் வைக்கப்பட்டு இருக்கும் இந்த அறிவிப்பு பலகை பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதே போன்று ஒரு சில ஆட்டோக்கள் பின்புறத்திலும் இதே வாசகம் பதியப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேருந்து நிறுத்தத்திலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.இந்த பதாகைகள் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னை போக்குவரத்து காவலர்களால் அமைக்கப்ட்டுள்ளது. சென்னை மக்கள் இந்த பதாகைகள் பற்றி விபரம் தெரியாவிட்டாலும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். கிட்டத்தட்ட போக்குவரத்து காவலர்கள் இந்த பதாகைகளை வைத்த நோக்கத்தை பிரதிபலிக்கும் வண்ணம் பொதுமக்களின் கருத்துக்கள் வெளிப்படுகின்றன. ஒரு வித்தியாசமான விளம்பரம் மூலம் மக்களை சிந்திக்க வைத்து மக்களை பதில் கூற வைத்து மக்களிடமே இந்த பதாகைகள் கவனம் ஈர்த்துள்ளன.

Advertisement

ஏன் Zero is Good ?

Advertisement

Zero is Good என்பது சாலைகளில் விதிமுறைகளை முறையாக பின்பற்றி சென்னையில் விபத்துகளை முற்றிலும் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பூஜ்ஜிய விபத்துகள் நல்லது என இந்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முதலிடம் :

கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பு சாலை மாதம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது சென்னை சேப்பாக்கம் பகுதியில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக போக்குவரதுத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், இந்தியாவில் அதிகம் விபத்து ஏற்படும் மாநிலம் தமிழகம் இருக்கிறது எனும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் நேரும் விபத்துகளில் உயிரிழந்தோர்களில் 50 சதவீதம் பேர் 19 வயது முதல் 32 வயது வரையிலானோர். ஆவர் என்றும், இந்த விபத்துகளுக்கு பிரதான காரணம் ஓட்டுனர்களின் கவனகுறைவு என்று ஆய்வில் தெரியவந்துள்ளது என அமைச்சர் அந்த நிகழ்வில் குறிப்பிட்டு இருந்தார்.

அப்போதே, தமிழகத்தை விபத்துகள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அதற்கான போக்குவரத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

முந்தைய நடவடிக்கைகள் :

கடந்த ஜூன் மாதம் சென்னை அரசு பேருந்து ஓட்டுனர்களில் 10க்கும் மேற்பட்ட விபத்துகளை ஏற்படுத்திய 334 ஓட்டுனர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

அடுத்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி, சட்ட ஒழுங்கு காவல்துறையினர் சென்னை பெருநகர் முக்கிய பகுதிகளில் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சட்ட ஒழுங்கு காவல்துறையினர் போக்குவரத்துக்கு உதவியாக இருப்பதன் மூலம் விபத்துகள் மேலும் குறைந்ததாகவும் , குற்ற சம்பவங்களும் குறைந்ததாகவும் மக்கள் மத்தியில் கூறப்படும் அளவுக்கு சென்னை காவல்துறையினர் தங்கள் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.

அதே சமயம் சமூக வலைதளத்தில் சிலர் , மாநகராட்சி போக்குவரத்து காவல்துறையை விமர்சனமும் செய்து இருக்கின்றனர். சாலையை சரி செய்ய வேண்டும், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், வாகனங்களை கண்காணிக்க வேண்டும் இதையெல்லாம் செய்தால் நல்லது எனவும் விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர்.

Tags :
Advertisement