சீனாவில் இளம் பெண்கள் கட்டிப்பிடிக்க ரூ.11; முத்தத்துக்கு ரூ.110 - சர்ச்சைக்குரிய ‘புதிய’ வியாபாரம்!
சீன தெருக்களில் தற்போது சர்ச்சைக்குரிய புதிய வியாபாரம் ஒன்று தலைதூக்கியுள்ளது. தற்போது, சீன தெருக்களில் நீங்கள் நடந்து செல்லும் போது இளம் பெண்கள் விலைப்பட்டியலுடன் அமர்ந்து இருப்பதை பார்க்க முடியும். அவர்கள் வழக்கமான சேவைகள் அல்லது பொருட்களை விற்பனை செய்வதற்கு பதிலாக, உறவின் தருணங்களை விலைக்கு வழங்குகின்றனர்.
அதாவது, பொதுவாக உறவுகள் என்பது பொறுப்புணர்வுடன் இருப்பதால், பலர் தங்களுக்கான பிணைப்பில்லாத வெறும் அன்பை மட்டும் பெற விரும்புகின்றனர். இந்த விசித்திரமான போக்கை உணர்ந்து கொண்ட சீன வாசிக,ள் இதற்கான வணிக சந்தையையும் உருவாகியுள்ளன. இதன் மூலம் சீனாவில் “எந்தவொரு நிபந்தனைகளும், நீண்ட கால உறுதிப்பாடுகளும் இல்லாத ‘அன்பு’ நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. அதாவது பணத்துக்கு பல்வேறு ரொமான்டிக் அனுபவங்கள் வழங்கப்படுகின்றன.
சீனாவின் ஷென்ஜென் போன்ற நகர தெருக்களில் விலைப்பட்டியலுடன் அமர்ந்து இருக்கும் இளம் பெண்கள், முத்தமிடுதல், கட்டிப்பிடித்தல், உடன் இணைந்து திரைப்படம் பார்த்தல் போன்ற சேவைகளை வழங்குகின்றனர்.
விலைப்பட்டியலில் முறையே, ரூ.11க்கு கட்டிப்பிடித்தல், ஒரு முத்தத்திற்கு ரூ.110, சேர்ந்து திரைப்படம் பார்ப்பதற்கு ரூ.150, ஒரு மணி நேரம் சேர்ந்து குடிப்பதற்கு ரூ.461, மற்றும் சேர்ந்து வீட்டு வேலை செய்வதற்கு ரூ.2000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான போக்கு நாட்டிலுள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தாலும், உலுகிலும் பல்வேறு வினாக்களையும், எதிர் கருத்துகளையும் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.