சபாநாயகர் "அவசரகால சட்டத்தை" தோண்டி எடுத்து துக்கம் தெரிவிப்பது ஏன்?
மோடிஜி சர்க்கார்-2 அரசில் முன்னணியில் இருந்த அமைச்சர்கள் பலரும் அதே இலாக்காகளுடன் NDA-2 அரசிலும் தொடர்கிறார்கள்.இவர்கள் பிரதமரால் தேர்ந்தெடுப்படுவதால் பிரதமரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள். அந்த வகையில்மோடி சர்க்கார்-2 காலத்தில் சபாநாயகராக இருந்த ஓம்பிர்லா மீண்டும் மோடிஜியின் NDA-2 ஆட்சி காலத்திற்கும் அவரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அரசியல் சட்டப்படியான ஜனநாயகத்தில் மக்களவை பிரதானமானது.அதில் இருந்து தான் அரசும் ஆட்சியும் அமைகிறது.சபாநாயகர் அதன் நீதிதர்ம தேவதை.சென்ற மக்களவையில் சபாநாயகர் ஒரு தலை பட்சமாக செயல்பட்டார் என்று சபையிலும் வெளியிலும் பேசப்பட்டது.நீதிமன்ற தீர்ப்புகளுக்கு மேல் முறையிடு உண்டு.ஆனால் சபாநாயகர் தீர்ப்புக்கு மேல் முறையீடு கிடையாது.ஆனால் அதற்கு அவர் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
தர்ம தேவதையான யமதர்மராஜனே மார்கண்டேயன் மற்றும் சத்யவான் விஷயத்தில் வருத்தப்பட நேர்ந்தது எல்லோருக்கும் தெரியும்.சாதாரணமாக இரங்கல் தீர்மானங்களை சபாநாயகர்கள் முன்மொழிந்து சபை அஞ்சலி செலுத்துவது நடைமுறை.
ஆனால் 50 வருடங்களுக்கு நடந்து முடிந்து வரலாற்று பெட்டகத்திற்கு சென்று விட்ட இந்திராகாந்தி காலத்து "அவசரகால் சட்டத்தை" தோண்டி எடுத்து துக்கம் தெரிவிப்பது ஏன் என்று தெரியவில்லை.
முன்னதாக மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா நேற்று பதவியேற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசுகையில்,முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை அமல்படுத்தியது, அரசியல் சாசனம் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனிடையே, சபாநாயகரை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது. மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை சபாநாயகர் அறிவித்தார். இதனால், அவர், ‛ இந்தியா ‘ கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று சந்தித்தார். நாடாளுமன்ற செயல்பாடு குறித்து பல விஷயங்களை பேசினோம். அவையில் சபாநாயகர் அவசர நிலை குறித்து பேசியது குறித்தும் விவாதித்தோம். இது பற்றி பேசிய ராகுல் காந்தி, அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர் தவிர்த்து இருக்க வேண்டும். இது அரசியல் ரீதியிலான கருத்து என்பதால் நிச்சயம் தவிர்த்து இருக்க வேண்டும் என்றார், இவ்வாறு அவர் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.