தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஒலிம்பிக் கமிட்டி இந்தியாவுக்கான உறுப்பினராக நீடா அம்பானி மீண்டும் தேர்வு!

12:20 PM Jul 25, 2024 IST | admin
Advertisement

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக நீடா அம்பானி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாரீசில் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 142வது கூட்டத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீடா அம்பானி இந்தியாவின் உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33 ஆவது ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில், 150க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். நேற்று நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் 142-வது கூட்டத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும், சமூக சேவகருமான நீடா அம்பானி, 100 சதவீத வாக்குகளுடன் இந்தியாவின் உறுப்பினராக போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியின் போது சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தனிநபர் உறுப்பினராக முதன்முதலில் நீடா அம்பானி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நீடா அம்பானி இது குறித்து, “சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். சர்வதேச ஒலிம்பிக் குழுவில் உள்ள நண்பர்கள் அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த மகிழ்ச்சி மற்றும் பெருமையின் தருணத்தை நான் ஒவ்வொரு இந்தியருடனும் பகிர்ந்து கொள்கிறேன், மேலும் இந்தியாவிலும் உலகெங்கிலும் ஒலிம்பிக் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான எங்கள் முயற்சிகளை தொடர எதிர்நோக்குகிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.

ஒலிம்பிக் போட்டியின்போது ஒவ்வொரு நாட்டின் வீரர்கள் தங்குவதற்காக, ஒவ்வொரு நாடுகளும் இல்லம் ஒன்றை அமைக்கும். வீரர்களின் தற்காலிக ஓய்வு அறையாகவும் இது பயன்படுத்தப்படும். 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் 35க்கும் அதிகமான இல்லங்கள் ஒலிம்பிக் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் முதன்முறையாக இந்தியா தனது இல்லத்தை (இந்தியா ஹவுஸ்) பாரீஸ் ஒலிம்பிக் வளாகத்தில் அமைக்கவுள்ளது. இதனை இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து நீடா அம்பானியின் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
IOC MemberMrs. Nita M. AmbaniOlympic GamesParis 2024Re-ElectedUnanimously
Advertisement
Next Article