தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இந்திய மருத்துவர்களின் சேவை உலகுக்கு தேவை!

06:15 PM Mar 20, 2024 IST | admin
Advertisement

ன்று உலகில் IT துறை என்றால் அது Information Technolgy யா அல்லது Indian Technology யா என்று சொல்லுமளவில் மாறிவிட்டது. அதுபோல அடுத்து மருத்துவ துறையில் ஒரு மிகப்பெரிய உலகளாவிய வரவேற்பு என்பது Health Care என்ற Hospital துறையில் கொடி கட்டி பறக்க இந்தியர்கள் துவங்கி இருக்கிறார்கள். அமெரிக்காவில் அடுத்த பத்து வருடத்திற்கான நர்ஸ்கள் தேவை 1,93,000. இந்தியாவில் மட்டும் 43 லட்சம் நர்ஸ்கள் WHO Norms பூர்த்தி செய்ய தேவைப்படுகிறார்கள். அது உலகளவில், கிட்டத்தட்ட 86 லட்சமாக இருக்கும். இந்தியாவில் 2000 நர்ஸிங் டிப்ளமோ, 1200 நர்ஸிங் டிகிரி மூலம் 60,000 வருகிறார்கள் தற்போதைய நிலையில் 79,859 பேரை நம்மால் ட்ரெய்ன் செய்ய முடியும். அதனால் மத்திய அரசு 260 புதிய நர்ஸிங் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது.

Advertisement

ஆனால், நர்ஸிங் படித்துவிட்டு வந்த மாணவர்ளுக்கு வேலை இல்லை என்ற பிரச்சினை. அப்படியெனில் எங்கே பிரச்சனை என்று அரசு ஆராய்ந்து, மாணவர்களுக்கான தரம் இல்லாததுதான் முக்கிய காரணம் என்று கண்டறிந்தது. இன்று வளர்ந்த நாடுகளில் 8.3% ஆக இருக்கும் இந்திய நர்ஸ்களின் எண்ணிக்கை, அடுத்த 6 ஆண்டுகளில் 15.6% ஆக உயரும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதை மேலும் அதிகரிக்க வேண்டுமெனில் நம் மருத்துவ மாணவர்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.

இந்திய டாக்டர்கள், அதுவும் குறிப்பாக Dentist என்பது அமெரிக்காவில் படிப்பது Very Expensive. ஆனால் இங்கே ஒரு MDS முடித்த டெண்டிஸ்ட்களுக்கு ₹20,000 கூட கிடைப்பதில்ல. BDS படித்தவர்களுக்கு வேலையே கிடைப்பதில்லை. அதே சமயம் அமெரிக்காவில் ஒரு பல் மருத்துவரின் சம்பளம் 80,000 லட்சம் முதல் 2 கோடி வரை. அதனால் மாற்று வழியாக மேலை நாடுகளில் வாய்ப்புகளை தேடுகிறார்கள். ஆனால் BDS அல்லது MDS அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படவில்லை. ஓரளவு வசதியானவர்கள் அங்கே இரண்டு வருட கோர்ஸ் மூலம் கிட்டத்தட்ட 1 கோடி செலவு செய்து அங்கே படிக்கவைக்க அனுப்புகிறார்கள். அதனால் அங்கே இன்று இந்திய Dentist களின் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்துள்ளது.

Advertisement

Mental health creative concept. Circle frame with medicine thin line icons and tags. Flag of the India

அங்கே மருத்துவர்கள் இல்லாததற்கு சொல்லப்படும் மிக முக்கிய காரணம், மேற்கத்திய நாடுகளில் மருத்துவ படிப்பு என்பது மிகவும் Expensive என்பது மட்டுமல்ல, குறைந்தது 10 வருடம் ஆகிறது என்பதால் அதை செய்ய அமெரிக்கர்கள் முன் வருவதில்லை என்பதை விட அவர்கள் பொருளாதாரம் அனுமதிப்பதில்லை என்பதே சரி. அதனால் சீனர்களும், இந்தியர்களுமே அந்த வெற்றிடத்தை ஆக்கிரமித்தார்கள். இன்று சீனாவின் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி டைவ் அடிப்பதால், அமெரிக்காவில் கல்வி கற்கும் சீன மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இந்திய மாணவர்கள் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளார்கள். அதற்கு பணம் மட்டுமல்ல், இந்தியர்கள் நோயாளிகளை அன்புடன் பார்த்துக் கொள்வதால் இந்திய நர்ஸுகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு அங்கே உள்ளது. குறிப்பாக வசதியானர்வகளுக்கு மட்டுமல்ல, வயதானவர்களுக்கு நல்ல பென்ஷன் வருவதாலும், அரசாங்கம் அவர்களுக்கு உதவுவதாலும், 80% பெற்றோர்கள் பிள்ளைகளால் கவனிக்கப் படுவதில்லை என்பதாலும் இந்த டிமாண்ட் வெகுவாக அங்கே உயர்கிறது.

அங்கே 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எண்ணிக்கை கனிசமாக அதிகரிப்பதால், அவர்களை பார்க்க பெருமளவில் டாக்டர்கள், நர்ஸ்கள் தேவைப் படுகிறார்கள். ஆனால் நம்மிடம் இருக்கும் நர்ஸுகளின் எண்ணிக்கை ஒரு பக்கம் குறைவாகவும், மறுபக்கம் அவர்கள் கல்வித்தரம் முறையான அனுபவம் இல்லாததால், படித்தும் பிரயோஜனம் இல்லாமலும் இருக்கிறார்கள். ஆம் தனியார் மருத்துவ, மற்றும் செவிலியர் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு நோயாளிகள் கிடைப்பதில்லை என்பதால் அனுபவமும் கிடைப்பதில்லை. அதனால் அவர்களுக்கு சரியாக BP பார்க்க கூட தெரியவில்லை என்பது குற்றச்சாட்டு. அதற்கு தீர்வே இல்லையா? .

இதை மாற்ற, தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள், அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்த இருக்கிறார்கள். உதாரணமாக தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக மூன்று பெரிய அரசு மருத்துவமனை தாலூகா அளவில் உள்ளது. ஆனால் போதிய மருத்துவர்கள் அங்கே இல்லை. அதனால் தனியார் மருத்துவ கல்லூரிகளை அரசு மருத்துவமனைகளோடு இணைப்பதால், அவர்களுக்கு சிறப்பான அனுபம் கிடைக்கும் அதன் மூலம் அவர்கள் சிறந்த அனுபவத்தோடு கூடியவர்களாக வெளிவருவார்கள். அதே சமயம் நமது மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைக்கும். மேலும் அது வெளி நாடுகளில் இருக்கும் தேவைகளை அவர்களால் பூர்த்தி செய்யமுடியும் என்பதால்தான் நம்மவர்களுக்கு வரவேற்பு மிக அதிகரிக்கும்.

சரி, இங்கே படித்துவிட்டு மேலை நாடுகளில் வேலை செய்ய செல்வதால் நமக்கென்ன லாபம்?

அமெரிக்காவில் பணிபுரியும் ஒரு நர்ஸ் வருடம் குறைந்தது 10 லட்சம் ரூபாய் இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களுக்கு அனுப்புகிறார்கள். இந்தியாவின் மூன்றாவது பெரிய அன்னிய செலாவணி, வெளி நாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் மூலம் கிடைப்பதே! அது மட்டுமல்ல, நம் நாட்டில் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் அரசு கொடுக்கின்ற இன்சூரன்ஸ் மூலமே நமக்கு தரமான மருத்துவத்தை கொடுப்பதற்கு மத்திய அரசு ஆலோசனை செய்துவருகிறது. அப்படியெனில் AIMS போல ஒரு மருதுவத்தை நம் தாலூகாவில் இருக்கும் அரசு மருத்துவ மனைகளிலேயே வருங்காலத்தில் நமக்கு கிடைக்கும். ஆனால் அதற்கு நமது மாநிஅல் அரசு முட்டுக்கட்டை போடுகிறது. ஏனெனில் இங்கே இருக்கும் தனியார் மருத்துவமனைகள் அரசுக்கு காசு கொடுத்து அதை தடுக்கிறது. AIMS வர காலதாமதம் ஆனதற்கு இரண்டு திராவிட கட்சிகளும் தனியார் மருத்துவமனைகளிடம் விலைபோனதே காரணம்!

அப்படியானால் இதுபோன்ற நல்ல திட்டங்கள் நடைமுறைக்கு, ₹1000 கிடைக்கிறது, இலவச பஸ் பாஸ் என்று பார்க்காமல் மோடி அரசை இன்று பாராளு மன்றத்திற்கும், நாளை அண்ணாமலையை சட்டசபைக்கும் தேர்ந்தெடுங்கள். நம் வாழ்க்கைத் தரமும், இந்திய பொருளாதாரமும் உலகளவில் பெருகும். அப்போது மத்திய, மாநில அரசுகள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுவதால், இதுபோன்ற திட்டங்கள் எளிதில் நடைமுறை படுத்தவும், சிறப்பாக செயல்படுத்தவும் இரண்டு அரசும் பாஜக அரசாக இருந்தால்தான் நல்லது என்பதால்தான் அதை இரட்டை எஞ்சின் அரசு என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, உலகளவில் உள்ள மிடில் கிளாஸ் மக்கள், அங்கே மருத்துவம்.செய்ய அதிகம் செலவாகிறது என்பதால், தரமான மருத்துவம் பார்க்க இங்கே வருகிறார்கள். அதன் மூலமும் இந்தியாவின் அன்னிய செல்வாணி அதிகரிக்க்கிறது. அதை Medical Tour என்று அழைக்கிறார்கள். இப்போது வெளி நாடு சென்று வேலை செய்து ஓரளவு பணம் சேர்த்தபின், அவர்கள் இந்திய வந்து தொழில் தொடங்க வாய்ப்புகள் அதிகம். அப்போது நமது Bio-Chemistry என்ற அது சார்ந்த மருந்து உற்பத்தியும் உயரும். ஏற்கனவே உலகில் அதிக மருந்து ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னலையில் உள்ளது. அது மேலும் பெரியளவில் உயரும். முக்கியமாக நாம் கொரானாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்து உலகிற்கு கொடுத்த பின், நமது மருந்து ஏற்றுமதி பெருமளவில் உயர்ந்துள்ளது!

மரு. தெய்வசிகாமணி

Tags :
doctorsHospitalsIndiamedicareNursesstudy
Advertisement
Next Article