தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இந்தியன் ரயில்வேயில் 32,438 காலி பணியிட வாய்ப்பு!

05:29 AM Jan 23, 2025 IST | admin
Advertisement

ந்திய ரயில்வேயில் 32,438 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்.ஆர்.பி அறிக்கை வெளியிட்டுள்ளது. குரூப் டி பிரிவில் Pointsman B (Traffic), Assistant (Track Machine) (Engineering), Assistant (Bridge) (Engineering), Assistant (Workshop) (Mechanical) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.

Advertisement

இதில், வடக்கு ரயில்வேயில் 4,785 பணியிடங்கள், மேற்கு ரயில்வேயில் 4,672, மத்திய ரயில்வேயில் 3,244, தெற்கு ரயில்வேயில் 2,694 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது தவிர மற்ற மண்டலங்களில் உள்ள காலி பணியிடங்கள் குறித்தான விவரங்களும் வெளியாகியுள்ளது.

Advertisement

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு குறிப்பிட்ட பதவியின் அடிப்படையில் மாறுபடும், அதிகபட்ச வயது வரம்பு 36 ஆண்டுகள்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/ PwBD – ரூ.250/-
மற்றவர்கள்: ரூ.500/-

எப்படி விண்ணப்பிப்பது?

www.rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ RRB இணையதளத்தைப் பார்வையிடவும்.

தனிப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க ஒரு முறை பதிவு செயல்முறையை முடிக்கவும்.

உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.

“Apply for RRB Ministerial and Isolated Category Teachers Vacancy 2025.” என்ற தலைப்பில் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

துல்லியமான தனிப்பட்ட, கல்வி மற்றும் தொழில்முறை விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, பின்னர் சமர்ப்பிக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புக்காக அச்சிடப்பட்ட நகலை வைத்திருக்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Computer-Based Test (CBT), Physical Efficiency Test (PET), Document Verification (DV), Medical Examination (ME) அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். தேர்வுகள் இரண்டு நிலையில் நடக்கிறது. முதலில் கணினி அடிப்படையிலான தேர்வு, அதனை அடுத்து உடல் தகுதி தேர்வு நடைபெற இருக்கிறது. இதனை அடுத்து ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார். தேர்வை தமிழிலும் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான தகவல்களை https://www.rrbapply.gov.in/ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Apply for RRBCENCentralized Employment NotificationchennaiEmployment NotificationGroup DjobLevel 1Level 1 Group DMinisterial and Isolated CategoryRRBகல்வி தகுதிகாலிப்பணியிடங்கள்சென்னைரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் இந்திய ரயில்வேரயில்வே துறை வேலைவாய்ப்பு
Advertisement
Next Article