For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அன்னப்பூர்ணா முதலாளி மன்னிப்பு கேட்டது ஏன்?

05:44 PM Sep 13, 2024 IST | admin
அன்னப்பூர்ணா முதலாளி மன்னிப்பு கேட்டது ஏன்
Advertisement

ன்னப்பூர்ணா முதலாளி சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது! கோவை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உடன் இருக்கிறார்!

Advertisement

இங்கு சீனிவாசன் அவர்கள் எதற்காக மன்னிப்பு கேட்டார் என்று ஆராய்ந்தால்,

1. அரசின் கொள்கையை எதிர்த்தாரா?
இல்லை

Advertisement

2. அரசின் வரி வசூலைக் குறைக்கச் சொன்னாரா?
இல்லை

3. தன்னுடைய தொழிலுக்குச் சலுகை கேட்டாரா?
இல்லை

4. அரசை நடத்தும் பாஜகவை விமர்சித்தாரா?
இல்லை

5. நிதியமைச்சரை விமர்சித்தாரா?
இல்லை

6. சட்டமன்ற உறுப்பினரை விமர்சித்தாரா?
இல்லை

7. சாமானிய மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாரா?
இல்லை

8. அரசின் மூர்க்கமான GSTயால் தன் தொழில் நசுக்கப்படுகிறது என்றாரா?
இல்லை

9. வரி வசூல் செய்யும் அதிகாரிகளை எதிர்த்துக் குறை கூறினாரா?
இல்லை

வேறு என்னதான் செய்தார்?

"நீங்க எவ்வளவு வேண்டுமானாலும் கூடுதல் வரி போட்டுக்கங்க. ஆனா ஒரே வரியா இருந்தா இலகுவாக பில் போடலாம்; அதிகாரிகளுக்கும் வரி போடறதுல சிரமம் இருக்காது" என ஒரு கருத்தை முன் வைத்தார்!இதை அரசும் நிதியமைச்சரும் பாராட்ட வேண்டும். மக்களும் எதிர்க்கட்சிகளும் அன்னப்பூர்ணா முதலாளியை விமர்சிக்க வேண்டும்!

ஆனால் என்ன நடந்திருக்கிறது!?

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அரசின் வரிக் கொள்கைக்கு ஆதரவாகவே பேசி, வரி விதிப்பு அளவுகோல் முறையில் ஒரு ஆலோசனை, கோரிக்கை சொல்லப்பட்டிருக்கிறது. அதையே தாங்கிக் கொள்ள முடியாமல் தன் பதவியை வைத்து மிகப் பெரிய தொழிலதிபரை மன்னிப்புக் கேட்க வைத்திருக்கின்றனர்! அந்த வீடியோவையும் கூச்சப்படாமல் ஆணவத்துடன் வெளியிட்டு இருக்கின்றனர்!

அன்னப்பூர்ணா முதலாளியை எதிர்க்க வேண்டிய நாம், இப்போது அவருக்கு ஆதரவான ஒரு நிலைமை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்! இதுதான் பாசிசம்! பெரும்பான்மை வாதத்தை பெரும்பான்மை வாத மக்கள், வலிமையாக ஆதரித்ததன் விளைவை இன்று இந்தியத் தொழில்துறை அனுபவிக்கிறது.முதலில் சிறுபான்மையினரை வசை பாடுவார்கள்.. பின்பு சிறுபான்மையினரை அச்சுறுத்துவார்கள்...பின்பு சிறுபான்மையினரின் வாழ்வியல் சூழலை அழிக்கச் செய்வார்கள்!இறுதியாகப் பெரும்பான்மை வாதமே பெரும்பான்மை வாதத்தை அழித்தொழிக்கும்!

இதற்குப் பெயர் தான் பாசிசம்!

பிலால் அலியார்

Tags :
Advertisement