தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர்கள் பணி வாய்ப்பு!

05:28 AM Jul 12, 2024 IST | admin
Advertisement

ந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 சார்பில் அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர்கள் பணி காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள முகவர் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் விண்ணப்பதாரர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் தகுதிக்கான மூல சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் நேர்காணலில் பங்குபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

துறையின் பெயர் :

இந்திய அஞ்சல் துறை

Advertisement

வகை :

தமிழ்நாடு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்களின் பெயர் :

அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர்

சம்பளம் :

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமானது அரசு விதிகளின் அடிப்படையில் பேச்சுவார்தைக்குட்பட்டது.

கல்வி தகுதி :

மேற்கண்ட அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்., அதிகபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்.அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பணியமர்த்தப்படும் இடம் :

சென்னை – தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் முறை :

இந்திய அஞ்சல் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பணிகளுக்கு நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம் :

அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம்,

தாம்பரம் கோட்டம்,

சென்னை -600 045

என்ற முகவரியில் அமைந்துள்ள தாம்பரம் தலைமை அஞ்சலகத்தின் முதலாவது தளத்தில் நேர்காணல் நடைபெறும்.

நேர்காணலுக்கான தேதி :

30.07.2024 தேதியன்று காலை 11 மணிக்கு அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடைபெறும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் :

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

குறிப்பு :

வேலைவாய்ப்பில்லாத, முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் மண்டல பணியாளர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், சுயஉதவி குழுக்கள், ஊராட்சி தலைவர், சுயவேலை செய்கின்ற இளைஞர்கள், ஏதாவது ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் முகவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் நபர் வேறு எந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் அங்கீகரிக்கப்பட்ட முகவராக இருக்கக் கூடாது.

மேலும் தேர்வு செய்யப்படும் நபர்கள் தேசிய சேமிப்பு சான்றிதழ் அல்லது குடியரசு தலைவரின் பெயரில் உறுதியளிக்கப்பட்ட கிசான் விகாஸ் பத்திரம் வடிவில் ரூ.5,000 காப்பீட்டு தொகையாக செலுத்தவேண்டும். தற்காலிக உரி்ம கட்டணமாக ரூ. 50 செலுத்தவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம், பான் அல்லது ஆதார் அட்டையின் நகல், கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றை கொண்டுவரவேண்டும். பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Tags :
jobLife Insuranceopportunitypost officeSales Agent
Advertisement
Next Article