For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

நோக்கியாவின் புதிய சி இஓ இந்தியாவைச் சேர்ந்த ராஜீவ் சூரி நியமனம்

08:11 AM Apr 30, 2014 IST | admin
நோக்கியாவின் புதிய சி இஓ இந்தியாவைச் சேர்ந்த ராஜீவ் சூரி நியமனம்
Advertisement

பன்­னாட்டு நிறு­வ­னங்­களின் தலைமை செயல் அதி­கா­ரி­க­ளாக, இந்­தி­யர்கள் நிய­மிக்­கப்­ப­டு­வது தற்­போது அதி­க­ரித்து வரு­கி­றது.சமீ­பத்தில், அமெ­ரிக்­காவை சேர்ந்த பிர­பல மென்­பொருள் நிறுவ­ன­மான ‘மைக்­ரோ­சாப்ட்டின் தலைமை செயல் அதி­கா­ரி­யாக, இந்தி­யாவைச் சேர்ந்த சத்யா நாதெல்லா நிய­மிக்­கப்­பட்டார்.இந்­நி­லையில், பின்­லாந்தில் தலைமை அலு­வ­ல­கத்தை கொண்டு செயல்­பட்டு வரும், நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாகியாக இந்தியாவைச் சேர்ந்த ராஜீவ் சூரி இன்று நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மே 1 ஆம் தேதி முதல் பதவியேற்பார் என்று நோக்கியா அறிவித்துள்ளது.1995ல் நோக்கியாவில் இணைந்த இவர் நோக்கியாவில் பல உயர் பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது நோக்கியா தொலைத்தொடர்பு கருவிகள் வர்த்தக பிரிவு தலைவராக உள்ளார். அதற்கு முன்னதாக 2007 முதல் 2009 வரை நோக்கியாவின் சீமென்ஸ் நெட்வொர்க் பிரிவில் பணியாற்றினார். மேலும், இவர் குவைத், பின்லாந்து, லண்டன், நைஜீரியா, ஜெர்மனி மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இருந்துள்ளார்.
nokia_ceo_indian
செல்போன் விற்பனையில் உலகில் முதலிடத்தில் இருந்த நோக்கியா மொபைல் போன்களை, ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் பின் தள்ளிவிட்ட நிலையில், ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களை சமாளிப்பதற்காக 2011ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் சாப்ட்வேரை நோக்கியா மொபைலில் இயக்கியது. ஆனால் இது பெரிய அளவில் விற்பனையை அதிகரிக்கவில்லை.இந்நிலையில், சமீபத்தில், நோக்கியாவின் செல்போன் தயாரிப்பு பிரிவை மைக்ரோசாப்ட் நிறுவனம் 7.2 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. இதைத்தொடர்ந்து, இனி நோக்கியா, நெட்வொர்க் மற்றும் மேப்பிங் தொழில்நுட்பத்துறையிலும், அது சம்பந்தமான காப்புரிமைகளை பெறுவதிலும் தொடரும் என்று கூறப்பட்டது.இந்நிலையில்தான், நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாகியாக இந்தியாவைச் சேர்ந்த ராஜீவ் சூரி இன்று நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மே 1 ஆம் தேதி முதல் பதவியேற்பார் என்று நோக்கியா அறிவித்துள்ளது.

Advertisement

தற்போது நோக்கியா தொலைத்தொடர்பு கருவிகள் வர்த்தக பிரிவு தலைவராக உள்ளார். அதற்கு முன்னதாக 2007 முதல் 2009 வரை நோக்கியாவின் சீமென்ஸ் நெட்வொர்க் பிரிவில் பணியாற்றினார். நீண்ட காலமாக லாபமின்றி இயங்கிக்கொண்டிருந்த நோக்கியா நெட்வொர்க் யூனிட், ராஜீவ் சூரியின் செலவுகளைக் குறைத்த நிர்வாகத்தினால் கடந்த 2012ல் லாபப் பாதைக்கு திரும்பியது.மேலும் இந்த ராஜீவ் சூரி இந்தியாவின் மணிபால் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்தவர். எம்.பி.ஏ. மற்றும் முதுகலை பட்டம் ஏதும் படிக்காமல் சாதனைகளை படைத்த மிகச் சில கார்ப்பரேட் தலைமை நிர்வாகிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement